ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 18 வயது கர்ப்பிணி சானியா குழந்தை பிறந்தது. சக பயணிகள் உதவியுடன் பிரசவம் நடந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் நலமுடன் பராமரிக்கப்படுகின்றனர்.
மேற்கு வங்காளம், சுட்டஹாட்டா அடுத்த ஹால்டியா பகுதியை சேர்ந்த ஷேக் காசிம் என்பவரின் மனைவி சானியா (18) வயது நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்து உள்ளனர்.
அப்போது வண்டி ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வருவதற்கு முன்பு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் ஓடும் ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு சக பயணிகள் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பின்னர் ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து தாயும், சேயும் இருவரையும் பத்திரமாக மீட்டு திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாயும் சேயும் தற்போது நலமுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பெற்று வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் ஆன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.