நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் இப்போராட்டம் மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இந்தசூழலில் தான், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், நீட் தேர்வு முறைகேட்டால் உயிரிழந்த மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்தசூழலில் தான், மத்திய அரசுடனான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் சிஜெபி இன்று ஈடுபட்டது.
இதனையடுத்து, சிஜெபி-ன் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கலைந்து செல்லும்படியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி, கடந்த 1 மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த இந்தப் போராட்டம் நிறைவுற்றுள்ளது.