சத்தீஸ்கர் எக்ஸ் தளம்
இந்தியா

சத்தீஸ்கர் | நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 9 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Prakash J

இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கல் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இருந்து நக்சல்கள் நடமாட்டம் உள்ளதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களைப் பிடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, இன்று காலை அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி இரண்டு பெண்கள் உட்பட 5 கிளர்ச்சியாளர்களைக் கொன்றனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், பணியை முடித்துவிட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று மதியம் 2.15 மணியளவில் பஸ்தார் பகுதியில் உள்ள குத்ரு அருகே அவர்கள் சென்றபோது IED - வெடிகுண்டுகள் மூலம் நக்சல்கள் நடத்திய தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையின் வாகனத்தில் பயணித்த 9 பேரும் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த எட்டு பாதுகாப்புப் படை வீரர்களும், மாநிலத்தில் நக்சலிசத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் போலீஸ் பிரிவான மாவட்ட ரிசர்வ் காவலர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.