ஜம்மு காஷ்மீர்எக்ஸ் தளம்
இந்தியா
ஜம்மு - காஷ்மீர் | 150 அடி பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம்.. 5 வீரர்கள் பலி!
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
jammu kashmirx page
இன்று மாலை 5.40 மணியளவில் ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்ஓசி வழியாக பால்னோய் கோரா போஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்த 11 மராத்தா லைட் காலாட் படையின் ராணுவ வாகனம், சாலையை விட்டு விலகியபோது விபத்துக்குள்ளானது. வாகனம் சுமார் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஓட்டுநர் உட்பட 10 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வாகனத்தில் 18 ராணுவ வீரர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசாரும் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.