gold web
இந்தியா

மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரிக்க முடிவு.. தொடர்ந்து விலை உயரும் அபாயம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 1,000 டன் தங்கம் சேர்த்த மத்திய வங்கிகள் அடுத்த ஓராண்டிலும் கையிருப்பை விரிவாக்கம் செய்வது தொடரும் என கூறப்படுகிறது.

PT WEB

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அடுத்த ஓராண்டுக்குள் தங்களின் தங்கக் கையிருப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக உலக தங்க கவுன்சிலின் 2026ஆம் ஆண்டுக்கான ஆய்வு தெரிவிக்கிறது. பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய வங்கிகளில் சராசரியாக 1,000 டன் தங்கம் சேர்த்துள்ளன.

gold

இதனால் வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் நுகர்வோர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய, ரிசர்வ் வங்கி தனது தங்கக் கையிருப்பைத் தீவிரமாக உயர்த்தி வருகிறது; இதன் கையிருப்பு 2024 நிதியாண்டில் 822.1 டன்னாக இருந்தது, 2026 நிதியாண்டில் 880.52 டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.