உழைத்து சம்பாதிக்கும் தகுதிவாய்ந்த பெண்கள், விவாகரத்து பெறும்போதும் கணவர்களிடம் இருந்து ஜீவனாம்சம் கோரக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பெண் ஒருவர் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தாரி சிங், நன்கு படித்து முடித்து விவகாரத்து பெறும் மனைவிகள், தங்கள் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு நல்ல பணியில் அமர்ந்து பலவற்றை சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கணவரிடம் இருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை வைத்துக்கொண்டு இதுபோன்ற பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கக்கூடாது என்று அறிவுறுத்தியதோடு, மனுதாரர் தகுதிவாய்ந்த பெண் என்பதால், அவரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.