polygamy FM
இந்தியா

இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் பலதுணை மணம் (polygamy) என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் சட்டத்தில் இரண்டு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது இரண்டு பெண் ஒரு ஆணையோ திருமணம் செய்துக் கொள்ள முடியாது..

Vaijayanthi S

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை என்பது, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, கலாச்சாரம், மற்றும் அவர்களின் பாரம்பரியத்தைப் பொறுத்து வேறுபடும். இவர்கள் எப்பொழுதும் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்வதுடன் சுதந்திரத்துக்கும், தனிமனித விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வாழ்வார்கள்... பழங்குடியினரின் சமூக வாழ்க்கை பொதுவாக மரபு சார்ந்ததாகவே இருக்கும்..

இந்நிலையில், இன்றைய காலக்கட்டத்திலும் இன்னும் சில பழங்குடி மக்கள், பாரம்பரியம், மரபு சார்ந்த சடங்குகள் , கலாச்சாரம் என அனைத்து விஷயங்களையும் சார்ந்து வாழ்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம் இமாச்சல பிரதேசத்தின் ஹேட்டி(Hattee) சமூக மக்களின் வாழ்க்கை இப்போதும் முழுக்க முழுக்க மரபு சார்ந்தே இருக்கிறது..

சமீபத்தில் இங்கு நடைபெற்ற ஒரு திருமணம் தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.. அப்படி இத்திருமணம் கவனம் பெற காரணம் என்னவென்றால்? மணமகன்களாக சகோதரர் இருவரை மணமகள் ஒருவர் திருமணம் செய்து கொண்டதுதான். இப்படி 2 ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டது சட்டப்படி செல்லுமா? இந்திய சட்டம் திருமணம் பற்றி என்ன கூறுகிறது? என புதிய தலைமுறை இணைய தளத்தில் இருந்து நாம் கேட்ட பலவிதமான கேள்விக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மோனிகா... அவர் அளித்த பதில்களை இங்கே கேள்வி பதில்களாக பார்க்கலாம்..

இரு ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா?

இந்தியாவில் பலதுணை மணம் (polygamy) என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதனால் சட்டத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணையோ அல்லது இரண்டு பெண்கள் ஒரு ஆணையோ திருமணம் செய்துக் கொள்ளாமுடியாது.

இந்தியாவில் இன்னும் சில பழங்குடியின மக்கள் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு இது போன்ற திருமணத்தை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. தற்போதுள்ள சட்டங்களின்படி, இது சாத்தியமா?

சில பழங்குடியின மக்கள் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பெயரில் இன்றும் இதுபோல பலதர மணம் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் அந்த திருமணத்தை ஒரு போதும் அவர்கள் சட்டப்படி பதிவு செய்ய முடியாது.. விருப்பப்பட்டால் அப்படி பலதுணை திருமணம் செய்துக் கொள்ளலாமே தவிர எந்த இடத்திலும் அந்த திருமணம் சட்டப்படி செல்லுப்படியாகாது என்று கூறினார்..

lawyer Monica

ஓரினச்சேர்க்கை திருமணத்தைக்கூட சட்டம் அங்கிகரிக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழலாமே தவிர அதனை சட்டத்தில் பதிவு செய்ய முடியாது. இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை. அதுபோலவேதான் இந்த பலதுணை திருமணத்தையும் இந்திய சட்டம் அங்கிகரிக்கவில்லை.

திருமணம் குறித்து இந்திய சட்டம் என்ன சொல்லுகிறது?

இந்திய சட்டப்படி, ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு பெண்ணும் ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். இதுவே சாதாரண திருமண அமைப்பு. இரு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதுதான் சட்டப்பூர்வமானது. இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வது, சட்டப்படி தவறானது.

இந்திய சட்டத்தில் கணவனோ அல்லது மனைவியோ இறந்துவிட்டால் அல்லது விவகாரத்து பெற்றுவிட்டால் மறுதிருமணம் செய்துக்கொள்ளலாம். அதாவது 2வது திருமணம் செய்துக்கொள்ளலாம் என சட்டம் உள்ளது.

மரபு ரீதியான திருமணங்களை சட்டம் ஏற்குமா?

ஒவ்வொரு கலாசாரத்திற்கும் தனித்தனி திருமண சடங்குகள் உள்ளன. அவை பொதுவாக மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், மற்றும் உணவு பரிமாறுதல் போன்றவற்றை உள்ளடக்கும். இது இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தும். இது போன்ற அனைத்து சடங்குகளையும் இந்திய சட்டம் அங்கிகரிக்கிறது. ஆனால் மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் பலதுணை திருமணம் செய்துக் கொள்வதை அங்கிகரிக்கவில்லை.

எந்தப் பெண்ணும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டால், அவள் கணவன் மற்றும் அவனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடரலாம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அணுகலாம்.

அதனை தொடர்ந்து இமாச்சலில் நடந்த ஹட்டி பழங்குடியின சமூகத்தினர் நடத்திய திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இது போன்ற 2 ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்களிடம் இன்னும் சட்டமும் கல்வியும் முழுமையாக போய் சேரவில்லை என்றே தோனுகிறது” என்றார்.