டார்லிங் - சிறை
டார்லிங் - சிறை முகநூல்
இந்தியா

“முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது” - நீதிமன்றம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

2015 ஆம் ஆண்டு அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் என்ற பகுதியில் துர்கா பூஜை நடைபெற்றது. அதில் பாதுகாப்பிற்காக பெண் காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜனக் ராம் என்பவர், அங்கிருந்த காவலர்களிடம் பிரச்னை செய்ததாக தெரிகிறது. தொடர்ந்து அங்கிருந்த அந்த பெண் காவலைரை பார்த்து மதுபோதையில் இருந்த ஜனக் ராம் “ஹாய் டார்லிங். எனக்கு அபராதம் விதிக்க வந்தீங்களா?” என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் காவலர், இந்நபரின் மீது மாயாபந்தர் காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இந்தவழக்கின் தீர்ப்பு முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி, ஜனக் ராமுக்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து அங்கிருந்த கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதனை எதிர்த்து ஜனக் ராமன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் “யார் என தெரிய ஒரு பெண்ணை டார்லிங்என்று அழைப்பது இந்திய தண்டனை சட்டம் 354A மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் படி கிரிமினல் குற்றமாகும்.

காவல்துறை கான்ஸ்டபிளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தெருவில் ஒரு ஆண் குடிபோதையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெரியாத ஒரு பெண்ணை டார்லிங் என அழைப்பது மிகவும் புண்படுத்தும் வார்த்தையாகும். இதன் அடிப்படையில் இது பாலியல் ரீதியாக கூறப்பட்ட சொல்லாக கருதப்படுகிறது” என்று தெரிவித்து, 3 மாத கால சிறைத் தண்டனையை ஒரு மாத கால சிறை தண்டனையாக குறைத்து அந்நபருக்கு தண்டனை வழங்கியுள்ளது.