உத்தரப்பிரதேசம் முகநூல்
இந்தியா

உத்தரப்பிரதேசம்|பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுவன்... கொடூரர்கள் அரங்கேற்றிய கொடூரம்!

உத்தரப்பிரதேசத்தில், 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுவனை, எச்சிலை நாக்கினால் துடைக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை, ஆண்களையும் விட்டு வைக்கவில்லை .

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவரும் 15 வயது சிறுவனுக்குதான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜூலை 18 ஆம் தேதி மாலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நிதின் (23) மற்றும் ரோஹித் (24) ஆகியோர் 15 வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் அச்சிறுவனை வேறொரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர். அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பஜார் ஷுகுல் காவல் நிலைய எஸ்.எச்.ஓ அபினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.