கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது. அந்த வகையில், 40 வயதுக்குட்பட்ட ஊழியர்களே இந்தப் பணிநீக்கத்தின்போது அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்தகைய வயதுமிக்கவர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் என்ன பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”40 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறுபவர்களில் ஒருவராக உள்ளனர். இந்தச் சூழலில் நிறுவனத்தின் பட்ஜெட்டுகள் இறுக்கமாகும்போது முதலில் அவர்களே பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். 40 வயதுக்குட்பட்டவர்கள் பலரிடம் AI, ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய திறன்கள் இல்லை. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் சம்பள எதிர்பார்ப்புகளைக் கொண்ட வேலை தேடுபவர்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதில் சிரமத்தை எதிர்கொள்ளும்போது 40-40 பிரச்னை ஏற்படுகிறது. மேலும், அவர்களுடைய குழந்தைகள் கல்லூரிக்குச் செல்கிறார்கள், பெற்றோருக்கு அனுப்ப பணம் வேண்டிய தேவை இருக்கிறது, EMI-களை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. அவர்களிடம் அதிக சேமிப்பு இல்லை. இந்தச் சூழ்நிலையில் அவர்களுடைய பணி நீக்கம் என்பது என்பது மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.