3600 people were layoffs in the meta company
மெட்டாஎக்ஸ் தளம்

3,600 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகளவில் 3,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Published on

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது. இந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, உலகளவில் 3,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது அதன் பணியாளர்களில் சுமார் 5% பேரை பாதிக்கிறது. பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.

3600 people were layoffs in the meta company
மெட்டாஎக்ஸ் தளம்

ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, நிறுவனத்துக்குள் அவர்களது ஆக்ஸஸ் அட்டை செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்த பணி நீக்க நடவடிக்கையானது பிப்ரவரி 11 முதல் 18 வரை நடைபெறும் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போதைக்கு நிறுவனத்துக்குள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் கோர முடியாது என்றும், அவர்களது பணி நீக்க இறுதி தேதிக்குப் பிறகு, இதே நிறுவனத்தில் வேறு ஏதேனும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

3600 people were layoffs in the meta company
வருவாயைத் தவறாகப் பயன்படுத்திய 24 ஊழியர்கள்.. கண்டுபிடித்து பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com