பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் AI
இந்தியா

பஞ்சாப் தேர்தலில் வெல்ல பாஜக தீவிரம்.. களத்தில் ஆர்.எஸ்.எஸ்?

பஞ்சாபில் இன்னும் 4,5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அதில் வெற்றிபெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

பஞ்சாபில் இன்னும் 4,5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இதில் வெற்றிபெறுவதை முக்கியமாக கருதும் பாஜக தனது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் உதவியையும் பெற்றுள்ளது. தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பாஜக தலைவர் நிதின் நபீன், பஞ்சாப் பாஜக தலைவர், முன்னாள் தலைவர்கள், மாநில பொறுப்பாளர் உள்ளிட்டோருடன் ஆர்எஸ்எஸ் இணைப்பொதுச்செயலாளர் அருண் குமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோப்புபடம்

எல்லை மாநிலமான பஞ்சாபை வெல்வது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமாக இருக்காது என்றும் நாட்டின் நலன்களுக்கும் முக்கியமானது என்றும் அருண் குமார் கூறியதாக தெரிகிறது. மேலும் கடந்த முறை குறைந்த வாக்குகளில் வென்ற மற்றும் தோற்ற 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அருண் குமார் அறிவுறுத்தியதாக தெரிகிறது. தேர்தலில் அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் பெற ஆர்எஸ்எஸ் தொண்டர்களே களப்பணியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அகாலிதளத்துடன் பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.