ஹோலி பண்டிகையில் வண்ணப்பொடியை பிடிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாம் என்று பாஜக பிரமுகர் ஒருவர் சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மார்ச் 14 ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலியை முன்வைத்து உ.பி பாஜக தலைவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை விமர்சித்து வருகின்றனர். இந்தவகையில், உ.பி.யின் மற்றொரு முக்கியத் தலைவரான ரகுராஜ் சிங்கும் முஸ்லிம்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ ஹோலியின்போது வண்ணப்பொடியை தவிர்க்க விரும்புவோம். முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப்புகளை போல ஆண்கள் தங்களது தலையில் அணிந்திருக்கும் தொப்பிகள் மற்றும் ஆடைகளை பாதுக்க வேண்டுமெனில், ஹிஜாப்புகளை போல தார்பாய்களைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ளுங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால், வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள். ஹோலி பண்டிகையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மூன்று இடங்கள் உள்ளது.
அவர்கள் சிறைக்கு செல்வது, மாநிலத்தை விட்டு வெளியேறுவது இல்லையெனில், யமராஜரை சந்திக்க தயாராக இருப்பது. ஹோலி கொண்டாடப்படும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. எனவே, இது கலியுகத்திலும் தொடரும். இதை கொண்டாட ஆட்சயபனை இருந்தால், அவர்கள் தார்பாலினாலான ஹிஜாப் அணிய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜகவின் மூத்த தலைவர் ரகுராஜ் சிங் உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்தை தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதில் அவர், பல்கலைக்கழகத்துக்குள் ஒரு ராமர் கோயில் கட்டவும், தனிப்பட்ட முறையில் அடிக்கல் நாட்டவும் தனது அனைத்து செல்வங்களையும் நன்கொடையாக வழங்குவதாகவும் கூறியுள்ளார்.