’7 முதல் 8 மொழிகள் தெரியும்’ - மாநிலங்களவை எம்பி சுதா மூர்த்தியின் கருத்து!
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் சூழலில், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.
மும்மொழி கொள்கை வேண்டாம், இரு மொழி கொள்கையே போதும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கான நாடாளுமன்றத்திலும் காரசார விவாதம் ஏற்பட்டது. இந்த சூழலில் , மாநிலங்களவை எம்பியும், இன்ஃபோசிஸ் நாராயின் மனைவியுமான சுதா மூர்த்தி தெரிவித்திருக்கும் கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ மாணவர்கள் பல மொழிகளை கற்க வேண்டும். ஒரு நபரால் பல மொழிகளை கற்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. எனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும். எனவே, நிறைய கற்றுக்கொள்வதை விரும்புகிறேன். இதனால் குழந்தைகளுக்கும் பலன் கிடைக்கும்.” என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி முறை குறித்து சுதா மூர்த்தியுடனான தனது உரையாடல் பற்றி குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.