மதராஸி  pt
இந்தியா

மதராஸி மக்களின் கண்ணீர் கதை!

டெல்லி மாநில அரசின் நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்து, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் தமிழர்கள். என்ன நடந்தது?... விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

PT WEB

டெல்லி நிஜாமுதீன் ரயில்வே நிலையத்திற்கு அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை, தலைமுறையாக வசிக்கும் தமிழர்களின் குடிசைப் பகுதிதான் இந்த மதராசி முகாம். பாராபுல்லா பாலத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த மதராசி முகாம், மேம்பால புனரமைப்பு பணிக்காக முழுமையாக அகற்றப்படும் என மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, அங்கு வசிக்கும் சுமார் 370 குடும்பத்தினரின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.

இவர்களுக்கு மாற்று இடமாக, சுமார் 50 கிலோ மீட்டருக்கு அப்பால், நரேலா என்ற பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதிலும் 189 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதராசி முகாமில் வசிப்பவர்களின் குழந்தைகள் அருகே உள்ள தமிழ்வழி பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.

கல்லூரிகளில் படிக்கிறார்கள். பெற்றோர் அருகே இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் வேலைக்கு செல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தங்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் சிதைந்து விடும் என கவலை தெரிவிக்கின்றனர்.