இந்திய மக்கள் Pt web
இந்தியா

தென் மாநிலங்களில் தொடந்து சரியும் பிறப்பு விகிதம்.. மத்திய அரசின் அறிக்கை கூறுவது என்ன?

வட மாநிலங்களில் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட மிக அதிகமாகவும், தென் மாநிலங்களில் குறைவாகவும் இருப்பதை காட்டுகிறது.

PT WEB

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2024- ஆம் ஆண்டு மாதிரி பதிவு முறை (Sample Registration System) அறிக்கை, வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே உள்ள மக்கள்தொகை இடைவெளி அதிகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இங்குக் குறிக்கப்படும் பிறப்பு விகிதம் என்பது 1,000 நபர்களுக்கு நிகழும் பிறப்புகளின் எண்ணிக்கையாகும்.

இந்தியா

தேசிய சராசரி பிறப்பு விகிதம் 18.3 ஆக உள்ள நிலையில், பிஹாரில் 26.8 ஆகவும், உத்தர பிரதேசத்தில் 23.5 ஆகவும், ராஜஸ்தானில் 22.8 ஆகவும் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. மாறாக, கேரளத்தில் 11.1 ஆகவும், தமிழ்நாட்டில் 11.6 ஆகவும், ஆந்திராவில் 14.3 ஆகவும், கர்நாடகாவில் 14.9 ஆகவும் மிகக் குறைவாக உள்ளது.

மக்களவைத் தொகுதிகளை 815 ஆக உயர்த்தும் நோக்கில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடத்தப்படவிருந்த மறுவரையறை நாடாளுமன்றத்தில் ஏற்கனவே முறியடிக்கப்பட்டது. தற்போது, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்து, வட மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே இடங்களை ஒதுக்கீடு செய்வது தங்களுக்குப் பெரும் அரசியல் மற்றும் நிதிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, புதிய மறுவரையறை சூத்திரத்தைக் கோரி வருகின்றனர்.