பிகார் தேர்தல் PT Web
இந்தியா

பீகார் | ஆட்சியைப் பிடிக்கப்போவது இவங்கதானா? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ட்விஸ்ட்!

பீகாரில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பீகாரில், இந்த முறையும் பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் எனப் பல கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Prakash J

பீகாரில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பீகாரில், இந்த முறையும் பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் எனப் பல கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 243 தொகுதிகள் கொண்ட பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.69% சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. எஞ்சியுள்ள 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில், 2ஆம் கட்டமாக இன்று (நவம்பர் 11) வாக்குப்பதிவு நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 67.14% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

bihar election

பீகாரின் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜ - ஜேடியூ), மகாகத்பந்தன் கூட்டணி (காங் - ஆர்.ஜே.டி.), பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், தேஜஸ்வி யாதவ் சகோதரரின் கட்சி, அசாதுதின் ஒவைசி என பலமுனைப் போட்டி நிலவியது. இதில் பல தொகுதிகளில் தேஜகவுக்கும் மகாகத்பந்தனுக்கும் நேரிடையே பலத்த போட்டி நிலவியது.

நவம்பர் 14 வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பீகாரில், இந்த முறை பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் எனப் பல கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி 135 முதல் 160 பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

பீப்பிள்ஸ் பல்ஸ் (People's Pulse)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 133-159

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 75-101

ஜன் சுராஜ் : 0-5

மற்ற கட்சிகள் : 2-8

பீப்பிள்ஸ் இன்சைட் (People's Insight)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 133-148

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 87-102

ஜன் சுராஜ் : 0-2

மற்ற கட்சிகள் : 3-6

Bihar Election

மேட்ரிஜ் (Matrize)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 147-167

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 70-90

ஜன் சுராஜ் : 0-2

மற்ற கட்சிகள் : 2-8

டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 145-160

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 73-91

ஜன் சுராஜ் : 0-0

மற்ற கட்சிகள் : 5-10

ஜேவிசி’ஸ் போல் (JVC's Poll)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 135-150

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 88-103

ஜன் சுராஜ் : 0-1

மற்ற கட்சிகள் : 3-6

டிவி ரீசர்ச் (TV Research)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 137-152

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 83-98

ஜன் சுராஜ் : 2-4

மற்ற கட்சிகள் : 0-0

சாணக்யா ஸ்ரேட்ஜிஸஸ் (chanakya strategies)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 130-138

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 100-108

ஜன் சுராஜ் : 0-0

மற்ற கட்சிகள் : 3-5

பிமார்க் (PMARQ)

பாஜ - ஜேடியூ கூட்டணி : 142-162

காங் - ஆர்.ஜே.டி கூட்டணி : 80-98

ஜன் சுராஜ் : 1-4

மற்ற கட்சிகள் : 0-3