Advanced Akash Weapon System web
இந்தியா

ஈரான் போருக்கு மத்தியில்.. அசுரனை களமிறக்கிய இந்தியா.. அஞ்சும் உலக நாடுகள்..?

இந்திய பாதுகாப்புத் துறையின் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் 'அட்வான்ஸ்டு ஆகாஷ்' ஆயுத அமைப்பின் முதல் உற்பத்தி மாதிரியை வெற்றிகரமாகத் தயாரித்து முடித்துள்ளது.

விமல் ராஜ்

மத்திய கிழக்கில் நடந்துவரும் போர் சூழலில், இந்தியா 'அட்வான்ஸ்டு ஆகாஷ்' ஏவுகணையை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இது எதிரி ஏவுகணைகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் பாதுகாப்புத் துறை வலிமையை அதிகரிக்கும் இந்த முயற்சி, 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கும் ஊக்கமளிக்கிறது.

மத்திய கிழக்கில் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா செய்துள்ள சம்பவம் தான் உலக நாடுகளின் கவனம் ஈர்த்து வருகிறது.. அதே சமயம் எதிரி நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்தியா அப்படி என்ன செய்தது சற்று விரிவாக பார்க்கலாம்!

இந்திய பாதுகாப்புத் துறையின் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ’அட்வான்ஸ்டு ஆகாஷ்' ஆயுத அமைப்பின் முதல் உற்பத்தி மாதிரியை வெற்றிகரமாகத் தயாரித்து முடித்துள்ளது. இந்த புதிய மாடலில் அதிநவீன மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதிரி நாட்டு ஏவுகணையின் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது..

Advanced Akash Weapon System

பழைய ஆகாஷ் ஏவுகணைகளை விட, இது வேகமாகவும், எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமலும் செயல்படும் திறன் கொண்டது. இந்திய ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்புத் திறனை இந்த ஏவுகணை அமைப்பு பலமடங்கு வலுப்படுத்தும். இந்த 'அட்வான்ஸ்டு ஆகாஷ்' ஏவுகணை அமைப்பின் முதல் மாதிரியைத் தயாரித்ததன் மூலம், தற்காப்புத் திறனில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.

இது இந்திய ஆயுதப் படைகளின் போர் வலிமையை அதிகரிப்பதோடு, 'ஆத்மநிர்பர் பாரத் திட்டத்’திற்கும் பெரும் ஊக்கமளிக்கும் என பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், ஆகாஷ் போன்ற நடுத்தர தூர ஏவுகணைகள் இந்தியாவிற்கு மிக அவசியம் என கூறப்பட்டுள்ளது.

Advanced Akash Weapon System

ஏற்கனவே ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கப் பல நாடுகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது மட்டுமின்றி, இது ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது..