model image meta ai
இந்தியா

3 வீடு.. 3 ஆட்டோ.. 1 கார்.. வட்டி மட்டும் ரூ.2000 | அதிகாரிகளை வியக்கவைத்த இந்தூர் பிச்சைக்காரர்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மீட்கப்பட்ட பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து விவரங்கள், அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மீட்கப்பட்ட பிச்சைக்காரர் ஒருவரின் சொத்து விவரங்கள், அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கையின்போது இந்தூரைச் சேர்ந்த 50 வயதான மங்கிலால் அப்பகுதியில் யாசகம் பெற்று வருகிறார். இந்த நிலையில் பிச்சைக்காரர்களை மீட்கும் பணியின்போது, மங்கிலாலையும் அதிகாரிகள் மீட்டனர். அவர் யாசகம் கேட்டு சக்கரப் பலகையில் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்லும் அந்த நபரைக் கண்டு அவர்கள் திகைத்துப் போனார்கள்.

moedl image

காரணம், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 வீடுகள் இருப்பதும், 3 ஆட்டோக்களை அவர் வாடகைக்கு விட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரும் சொந்தமாக ஒரு ஓட்டுநருடன் கார் வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. 5 லட்சம் ரூபாய் வரை சிலருக்கு கடன் கொடுத்திருக்கும் மங்கிலால், அதற்காக தினமும் வட்டியாக 500 ரூபாய் வரை வசூலிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2021-2022 முதல் பிச்சை எடுத்து வரும் தினசரி வட்டி மூலம் 2,000 வரையும் யாசகம் மூலம் தினமும் ரூ.500 வரை சம்பாதிப்பதாகவும் அதிகார்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தக் கூற்றை அவருடைய மருமகன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், "என் மாமாவின் சொத்துக்கள் குறித்து தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று மாடி வீடுகள், உண்மையில் அவரது தாயாரின் பெயரிலேயே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், ”வழக்கில் உண்மைகள் சரிபார்க்கப்பட்டவுடன் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

model image

அவரைப் பற்றி நன்கறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரவேஷின் தலைவர் ரூபாலி ஜெயின், ”தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவரின் வழக்கை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும், அவர் பிச்சை எடுப்பதன் மூலம் தனது மில்லியன் கணக்கான ரூபாய் செல்வத்தை குவிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அந்த நபர் ஒரு கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், ஆனால் தொழுநோய் காரணமாக அவரது விரல்கள் மற்றும் கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.