2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் வென்றுள்ளார்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி படைப்புகளுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. பானு முஷ்டாக்கின் ‘Heart Lamp’ சிறுகதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் உள்ள 12 சிறுகதைகளை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
50000 பிரிட்டிஷ் பவுண்ட் அதாவது சுமார் 57 லட்ச ரூபாய் பரிசுத்தொகை எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். சர்வதேச புக்கர் பரிசைப் பெறும் இரண்டாவது இந்தியர் பானு முஷ்டாக். 2022 ஆம் ஆண்டில் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இந்தப் பரிசை வென்றிருந்தார்.