கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். pt desk
இந்தியா

பெங்களூரு | நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

பெங்களூரு கிராமப்புற பகுதியில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரு கிராமப்புற பகுதியான போம்மனஹள்ளி காரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீப்பு (20), மற்றும் யோகேஸ்வரன் (20). இவர்கள் இருவரும் ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர். இந்நிலையில், இவர்கள் அதே கல்லூரியில் பயின்று வரும் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து பண்ணேற்கட்ட பகுதிக்குச் சென்றுள்ளார்

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சுவர்ணமூகி என்று அழைக்கப்படும் குளத்தில் நண்பர்கள் 5 பெரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத நிலையில், குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற யோகேஸ்வரன், நீரில் மூழ்கி தவித்துள்ளார். அவரை காப்பாற்ற தீப்பு சென்றுள்ளார். இவருக்கும் நீச்சல் ;தெரியாத நிலையில், இருவரும் நீர்ில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட மற்ற நண்பர்கள் மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய இரண்டு கல்லூரி மாணவர்களை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது