அயோத்தி ராமர் கோயில் File image
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு.. அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வரும் அறக்கட்டளை, கோயிலுக்கு நன்கொடையாகக் கிடைத்த பல கோடி ரூபாய் காணாமல் போய்விட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளது

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டவுள்ள இக்கோயிலைக் காணவும், பக்தி பரவசத்தில் மூழ்கவும் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அங்கு நாள்தோறும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள புகாரை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

ராமஜென்மபூமி தீர்த்தக் ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வழக்கமான உள்ளகத் தணிக்கை தற்பொழுது நடந்துவருவதாகவும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அறக்கட்டளையின் இந்த விளக்கம் மிகவும் தெளிவற்றதாகவும், மழுப்பலாகவும் இருப்பதாக அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார். மேலும், அனைத்து அறங்காவலர்களையும் ஒன்றிணைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.