செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வழக்கம் போல் சவாரிக்குச் சென்றுள்ளார். அப்போது தனது ஆட்டோவில் பயணித்த வாடிக்கையாளர்களுக்கு, பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார். இதற்கு என்ன காரணம் என பயணியர் கேட்ட போது, 'என் மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அதை கொண்டாடும் விதமாக அனைத்து பயணியருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்குகிறேன் என பதில் அளித்துள்ளார். இது மட்டுமன்றி தன் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுள்ளது குறித்து, தனது ஆட்டோவில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வைத்துள்ளார். இதை பயணி ஒருவர் தனது செல்போனில்; புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த செய்தி வைரலான நிலையில், பலரும் நகைச்சுவையாக கமென்ட் செய்துள்ளனர். சிலர் .மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதால் பாவம், ஆட்டோ டிரைவர் குஷியாக இருந்தார். இப்போது நீங்கள் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டீர்கள். இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரிந்தால், அந்நபர் நிரந்தரமாக ஆட்டோவிலேயே உறங்க வேண்டி வரும் என கமென்ட் செய்துள்ளனர்.