PM Modi FB
இந்தியா

HEADLINES|பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் முதல் ரஜினியின் கூலி பட தீர்ப்பு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று ஜப்பான், சீனா நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்லும் பிரதமர் மோடி முதல் ரஜினியின் கூலி படம் தீர்ப்பு வரை விவரிக்கிறது..

Vaijayanthi S

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் சீனா பயணமாக இன்று புறப்பட்டார். இருநாட்டு தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு இந்திய பொருட்களுக்கு சவாலாக உள்ளது. இதனால் தமிழக ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

1. 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான், சீனா நாடுகளுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி... இருநாட்டு தலைவர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டம்...

2. இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

3. அமெரிக்க வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை...

4. கொள்கை ரீதியான நடவடிக்கைகள் மூலம் ஏற்றுமதி பாதிப்பை தடுப்பது குறித்து விவாதம் என தகவல்... பிரதமர் மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்...

5. ஆடைகளை விற்பனை செய்ய புதிதாக 40 நாடுகளை அணுகும் மத்திய அரசு... ரஷ்யா, பிரான்ஸ், அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்ப திட்டம்...

modi, trump

6. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி தொழில் பாதிக்கும் அபாயம்... பின்னலாடை, தோல் பொருட்கள் உற்பத்தி, இறால் வளர்ப்பு தொழில் முடங்க வாய்ப்பு...

7. அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர் துணிநூல் தொழில் மிக மோசமாக பாதிப்பு என பிரதமர் மோடிக்கு சுப்பராயன் எம்.பி. கடிதம்... உடனடி நிவாரணத் திட்டம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை...

8. வாக்குத் திருட்டை தடுக்கக் கோரி பிஹாரில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு... குஜராத் மாடல் என்பது வாக்குத் திருட்டு மாடல் என ராகுல் குற்றச்சாட்டு...

9. எப்படிப்பட்ட சர்வாதிகாரியாக இருந்தாலும் மக்களிடம் மண்டியிட்டே ஆக வேண்டும் என்பதை பிஹார் நிரூபிக்கும்... பிஹாரில் ராகுல் நடத்திய பேரணியில் பங்கேற்ற பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

10. ஆர்.எஸ்.எஸ்., பாஜக கட்டுப்பாட்டிற்குள் அதிமுக சென்றுவிட்டதாக திருமாவளவன் விமர்சனம்.... அதிமுகவை விழுங்க பல யுக்திகளை ஆர்.எஸ்.எஸ் கையாளுவதாகவும் கருத்து....

coolie

11. தவெக மாநாட்டில் இளைஞரை பவுன்சர்கள் தள்ளிவிட்ட விவகாரம்... விஜய் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்...

12. விஜய் தனது கொள்கை என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தல்... பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என விஜய் பேசுவதில் என்ன கொள்கை இருக்கிறது எனவும் கேள்வி....

13. நடிகர் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் கோரிய விவகாரம்... படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

14. தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்... விதவிதமான வடிவில் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபாடு...

15. சென்னை மெரினாவில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு... பட்டினப்பாக்கத்தில் மணலில் லாரிகள் செல்வதற்காக கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்...

Vinayagar Chaturthi 2025 - Operation Sindoor 2025

16. நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா.... ஆபரேஷன் சிந்தூர், பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் பந்தல்கள் அமைத்து வழிபாடு....

17. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு... சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி....

18. 2030 காமன்வெல்த் போட்டி நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.... ஏலத்தில் இந்தியா தேர்வானால் போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்தவும் திட்டம்....

19. மது விடுதியில் ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரம்... நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்...

20. ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம்.... திருமண வாக்குறுதி கொடுத்து உறவுகொண்டு பிரிவது பாலியல் வன்புணர்வு அல்ல என கருத்து....

Rain in Tamil Nadu

21. கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதால் மழை தொடரும் என கணிப்பு...

22. ஜம்மு-காஷ்மீரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரிப்பு.... மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மும்முரம்....

23. தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் காமரெட்டி, மேடக் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு... மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சோகம்...

24. பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் பஞ்சாப் மாகாணம்... குடியிருப்புகள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...

25. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு... தாக்குதல் நடத்தியவரும் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்ததாக போலீஸார் தகவல்...

26. ரஷ்ய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்... எரிபொருள் உற்பத்தி குறைந்ததால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு....

27. மெக்சிகோ நாடாளுமன்றத்தில் செனட் தலைவர் மீது எதிர்க்கட்சியினர் தாக்குதல்.... இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் அவையில் கூச்சல் குழப்பம்....

28. ஸ்பெயினில் வருடாந்திர தக்காளி திருவிழா கோலாகலம்... தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாகம்...

29. யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்..... அமெரிக்க வீரர் ஜக்கரி ஸ்வஜ்தா ((ZACHARY SVAJDA))க்கு எதிரான ஆட்டத்தில் மூன்று செட்களை கைப்பற்றி அசத்தல்....