மீராபாய் சானு, சீனா எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES | அணை கட்டும் சீனாவின் திட்டம் முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, பிரம்மபுத்ரா நதியின் மீது மிகப்பெரிய அணையை கட்ட திட்டமிடும் சீனா முதல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4ஆவது தங்கம் வென்ற மீராபாய் சானு வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் பிரம்மபுத்ரா நதியின் மீது மிகப்பெரிய அணையை கட்ட திட்டமிடும் சீனா முதல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4ஆவது தங்கம் வென்ற மீராபாய் சானு வரை விவரிக்கிறது.

  • சென்னை, திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழகம் வருகிறார்.

  • திருச்சியில் ஆம்புலன்ஸ் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

  • பெயர் நீக்கத்தை எதிர்க்கும் விவகாரத்தில் பீகார் வாக்காளர்கள் கட்டாய விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • தமிழ்நாட்டை போன்று காலை உணவு திட்டத்தை பஞ்சாபிலும் செயல்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மீராபாய் சானு
  • தீபாவளிக்கு முன் பொதுமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக, GST வரி குறைப்பு அக்டோபர் 2 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட 4 போர்களை நிறுத்த வர்த்தக வரிகளை, கருவியாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  • திபெத்தில் பிரம்மபுத்ரா நதியின் மீது மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கான 85 விழுக்காடு நீரின் அளவு குறைய வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  • காயத்தில் இருந்து மீண்டு களம் கண்ட மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4ஆவது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

  • மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துகளை போலி வாரிசு சான்றிதழ் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாக கணவர் போனி கபூர் வழக்கு தொடுத்துள்ளார்.