ஒலிம்பிக் போட்டிக்கு 3 வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு

ஒலிம்பிக் போட்டிக்கு 3 வது முறையாக பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி பெறுகிறார்.
Mirabai Chanu
Mirabai Chanupt desk

உலகக்கோப்பை பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் புகெட் நகரில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்குரிய தகுதி சுற்றான இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் முறையில் 81 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என்று மொத்தம் 184 கிலோ எடை தூக்கி பி பிரிவில் 3 வது இடத்தை பிடித்தார்.

Mirabai Chanu
Mirabai Chanupt desk

முன்னாள் உலக சாம்பியனான மீராபாய் சானு கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது 49 கிலோ பிரிவு தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2வது இடத்தில் சானு உள்ளார். பாரீஸ் ஓலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார்.

Mirabai Chanu
“இதனால்தான் ரோகித்துக்கு இவ்ளோ Fans..” - ஹர்திக்கிற்கு ஆதரவாக Heart Touching செயல்! வைரல் வீடியோ!

ஒவ்வொரு எடைப் பிரிவிலும் தரவரிசையில் டாப் 10 இடத்திற்குள் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது உறுதியாகி விட்டது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com