model image x page
இந்தியா

HEADLINES |GST கவுன்சில் கூட்டம் முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரை விவரிக்கிறது.

  • செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அனைத்து மாநில அரசு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • 25ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சிறைக்கு சென்றால் கனவுகள் சிதைந்து விடும் என்பதால் பதவிநீக்க மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • ஒருநாளும் உதயநிதி முதல்வராகவும், ராகுல் பிரதமராகவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  • தவெக மாநாட்டில், திமுக வெறுப்பை மட்டுமே விஜய் உமிழ்ந்து இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக மாநாடு விஜய்
  • உக்ரைன் அதிபரின் பேச்சுவார்த்தை கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.

  • புதினும், ஜெலன்ஸ்கியும் சண்டையிட்டுக்கொண்டு மக்களை கொன்று வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  • அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவல் துறையின் நிபந்தனைகளை பின்பற்றி நிகழ்ச்சியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

  • பீகார் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பாஜகவிற்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • டெல்லியில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்துள்ள உத்தரவுகளை விலங்குநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.