1. நாமக்கல், சேலம், வேலூர், வந்தவாசி பகுதிகளில் மழை... தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்....
2. இந்திய தேர்தல் ஆணையத்தை சாவி கொடுத்தால், ஆடும் பொம்மை போல பாஜக அரசு மாற்றி வைத்துள்ளது..... ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக்கூத்தாக்கி விட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்....
3. பிஹாரில் வாக்குரிமை யாத்திரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக 24 மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள திட்டம்
4. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள்.... வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க இருப்பதாக தகவல்....
5. திமுக கூட்டணியினர் ஒற்றுமையுடன் இருப்பது பலரது கண்களை உறுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.... கம்யூனிஸ்ட்களை விட என்ன தியாகம் செய்துள்ளார் பழனிசாமி எனவும் கேள்வி....
6. திமுகவின் பாவ மூட்டைகளை சுமக்க வேண்டாம் என திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்....சேரக் கூடாத இடத்தில் திருமாவளவன் சேர்ந்துவிட்டதாகவும் விமர்சனம்...
7. கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்கள் இருந்தாலும் சமூகநிதி என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து இருக்கிறாேம்... பிறந்தநாள் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு....
8. பரபரப்பான அரசியல் சூழலில், இன்று பாமக பொதுக்குழுவைக் கூட்டுகிறார் நிறுவனர் ராமதாஸ்.... பாமக எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்...
9. அரசியலில் சாதிதான் எனது முதல் எதிரி....விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேச்சு...
10. சென்னை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு... சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்....
11. தவெக தலைவர் விஜயால் எம்.ஜி.ஆர்.ஆக மாற முடியாது என செல்லூர் ராஜூ விமர்சனம்.... முதலில் பனையூரைவிட்டு வெளியே வந்து அரசியல் செய்ய வேண்டுமெனவும் அறிவுரை....
12. திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் படையெடுத்ததால் தரிசன நேரம் நீட்டிப்பு.... நள்ளிரவிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபாடு....திருத்தணி முருகன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பதிருவிழா... அரோகரா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம்....
13. பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருப்பதி... இலவச தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவிப்பு...
14. மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு... தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு...
15. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடுமுழுவதும் உறியடி நிகழ்ச்சி கோலாகலம்.... குழுவாக சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்த இளைஞர்கள்...
16. சர்வதேச விண்வெளி பயணத்துக்குபிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த சுபான்ஷு சுக்லா....டெல்லி விமான நிலையத்தில் விண்வெளி வீரருக்கு உற்சாக வரவேற்பு....
16. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்... பிரெஞ்சு வீரர் அட்மானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் சின்னர்...
17. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை புரட்டிப் போட்ட வெள்ளம்... கனமழைக்கு 2 நாட்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...