மழை
மழைமுகநூல்

18ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மழை
மழைகோப்புப்படம்

17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள் வடதமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்ககூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு.. ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இருநாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
தமிழ்நாடு அரசியல் களம் இன்று : ED சோதனையில் அமைச்சர் முதல் RSS மீதான கனிமொழியின் விமர்சனம் வரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com