summer  X
இந்தியா

உயரும் வெப்பநிலை.. 'மதிய நேரங்களில் வெளியே போகாதீங்க..' வானிலை மையம் அறிவுறுத்தல்!

இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துவரும் சூழலில், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

PT WEB

ஏப்ரல் 29 வரை கடலோரப் பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகரிக்கும் நிலையில், தண்ணீர் அதிகம் குடிக்கவும், லேசான பருத்தி ஆடைகள் அணியவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துவரும் சூழலில், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஆங்காங்கே வெப்ப அலை வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பம்

ஏப்ரல் 29ஆம் தேதி வரை தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வெப்ப பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் கூறப்பட்டுள்ளது. லேசான, காற்றோட்டமான மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான வெப்ப அலை தடுப்புத் திட்டத்தின் கீழான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.