andhra amaravati x page
இந்தியா

நாட்டின் முதன்மை நகரமாக மாற்ற முனைப்பு.. 9 கருப்பொருளை மையமாக கொண்டு உருவாகும் அமராவதி!

ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

PT WEB

ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் புதிய புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து FOCUS பகுதியில் பார்க்கலாம்... ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியை முதன்மை நகரமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சந்திரபாபு நாயுடு

பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில வாரங்களில் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மிக முக்கியமான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். நிதி, அறிவு, ஆரோக்கியம், விளையாட்டு உள்ளிட்ட ஒன்பது கருப்பொருள்களை மையமாக கொண்டு அமராவதியை நவீனப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதன் ஒருபகுதியாக, சுமார் 1,300கோடி ரூபாயில் நிதி நகரம் அமைக்கும் நோக்கில், எஸ்பிஐ, எல்ஐசி உள்ளிட்ட 15 பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாகும் என கூறப்படுகிறது. அத்துடன், 260 கோடி ரூபாய் செலவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக ,வெங்கடேஸ்வரா சாமி கோயில் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்திய வானியற்பியல் கழகத்துடன் இணைந்து 150 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கோளரங்கம் அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

andhra amaravati

அமராவதியில் புதிய ரயில் திட்டங்களுக்கு, எந்த தங்குதடையும் இல்லை. காஜிபேட்-விஜயவாடா ரயில்வே பிரிவில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. புதிய ரயில்பாதை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் அமராவதியை இணைக்க உள்ளது. இந்தப் புதிய ரயில் பாதையில், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே 3 புள்ளி 2 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலமும் கட்டப்பட உள்ளது. அமராவதியில் பெரிய ரயில் நிலையம் அமைக்க, 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 24 நடைமேடைகளுடன் உருவாக்கப்பட உள்ள அமராவதி ரயில் நிலையத்தை, நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையமாக கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.