Amita Singh Tomar web
இந்தியா

’குரோர்பதி' நிகழ்ச்சியால் புகழ்பெற்ற பெண் வட்டாட்சியர்.. ஊழல் வழக்கில் கைது!

2019-ல் அமிதாப் பச்சனுக்கு எதிரே அமர்ந்தி குரோர்பதி நிகழ்ச்சியில்ல் புகழ்பெற்ற வட்டாட்சியர், தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

PT WEB

2021இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கோன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் பங்கேற்றதால் புகழ்பெற்ற பெண் வட்டாட்சியர் அமிதா சிங் தோமர், இரண்டரை கோடி ரூபாய் வெள்ள நிவாரண மோசடி வழக்கில் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்​த அமிதா சிங் தோமர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமி​தாப் ​பச்​சன் நடத்​தும் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று ரூ.50 லட்​சம் பரிசு வென்​றிருந்​தார்.

Amita Singh Tomar

மத்​திய பிரதேச மாநில அரசில் விஜய்​பூர் தாசில்​தா​ராக பணியாற்றி வருகிறார் இவர். கடந்த 2021-ம் ஆண்டு மத்​திய பிரதேச மாநிலத்​தில் வெள்ள நிவாரண நிதியை அரசு வழங்கியது. அந்த நிதியை பரோடா பகு​தி​யில் விநி​யோகம் செய்த​தில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. ரூ.2.5 கோடி பணம் போலி​யான வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்​பப்பட்டு முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குவாலியரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த ஊழல் தொடர்பாக ஏற்கெனவே 22 வருவாய்த் துறை அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமிதா சிங் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமிதா சிங் தோமர் கைது செய்​யப்​பட்​டுள்​ளதைத் தொடர்ந்​து, அவர் தாசில்​தார் பணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார் என்று மாவட்ட ஆட்​சி​யர் அர்​பித்​ வர்​மா தெரி​வித்​துள்​ளார்​.