கேரளாவில் பாஜக ஆட்சி அமைப்பது வெகுதூரம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். கேரளாவின் வளர்ச்சியை பாஜகவால் மட்டுமே உறுதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். எல்டிஎஃப்-யுடிஎஃப் கூட்டணியால் மாநிலம் தேக்க நிலையை அடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
கேரளாவில் விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வளர்ச்சியடைந்த கேரளாவை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். திருவனந்தபுரத்தில் நடந்த பாஜககூட்டத்தில் பேசிய அவர், எல்டிஎஃப்-யுடிஎஃப் கூட்டணியால், கேரளா முன்னெப்போதும் இல்லாத வகையில் தேக்க நிலையை அடைந்துள்ளதாக விமர்சித்தார்.
கேரளாவை தேச விரோதசக்திகளிடம் இருந்து காப்பது மட்டுமே பாஜகவின் நோக்கம் எனக் கூறிய அமித்ஷா, கேரளாவில் பாஜக முதல்வரைப் பார்க்கும் நாள் வெகுதூரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.