சோம்நாத் கோயில் | உடுக்கை இசைத்தபடி சென்ற பிரதமர் மோடி!
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். இதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் உடுக்கை இசைத்தபடி பங்கேற்றார். 1026ஆம் ஆண்டு கஜினி முகமதுவால் தாக்கப்பட்ட கோயில் மீட்டெடுக்கப்பட்ட நிலையில் ஸ்வபிமான்பர்வ் என்ற பெயரில் சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத்திலுள்ள சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டிய பிரதமர் இதைத்தொடர்ந்து பிரதமரை வரவேற்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இசைக்கருவிகள் இசைக்கப்பட்டபோது அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
1026ஆம் ஆண்டு கஜினி முகமதுவால் தாக்கப்பட்ட சோமநாதர் கோயிலில் மீட்டெடுக்கப்பட்ட நிலையில் அதை கொண்டாடும் வகையில் ஸ்வபிமான்பர்வ் என்ற பெயரில் 2 நாட்களாக சிறப்புநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து சோம்நாத் கோயிலில் நடைபெற்ற சவுர்ய யாத்திரா நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். 108 குதிரைகள் அணிவகுத்துச் சென்ற இந்நிகழ்வில் உடுக்கை ஒலி எழுப்பி வழிபாட்டு முழக்கங்களை எழுப்பினர். சிவனின் இசைக்கருவியாக கருதப்படும் உடுக்கையை ஒலித்தபடி பிரதமரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றார்.
சாலையின் இருபுறமும் பல்வேறு மாநிலங்களின் கலாசார நடனங்களும் அரங்கேற்றப்பட்டன. சுமார் ஒர கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெற்றது.
சோமநாதர் கோயில் இடிப்பின் ஆயிரமாவதுஆண்டை முன்னிட்டு சோமநாத சுயமரியாதை பெருவிழா என்ற நிகழ்ச்சி 2 நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய பிரதமர், சோமநாதர் கோயில் அந்நிய படையெடுப்புகளின் போது பலமுறை இடிக்கப்பட்ட பின்பும் ஒவ்வொரு முறையும் அது மீண்டும் கட்டப்பட்டதாக தெரிவித்தார். ஆயிரம் ஆண்டு போராட்டம் என்பது உலக வரலாற்றில் எங்கும் இல்லாத நிகழ்வு என்றும் பிரதமர் தெரிவித்தார். சோமநாதர் கோயில் மறுகட்டுமானத்தை எதிர்த்தவர்கள் இன்னும் துடிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் பேசினார்.

