கத்தார் நாட்டின் இளவரசர்  முகநூல்
இந்தியா

அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்புவதற்கு இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்?

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த கத்தார் இளவரசரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.

PT WEB

பிரதமரின் அழைப்பின்பேரில், இந்தியாவுக்கு கத்தார் நாட்டின் இளவரசர் Sheikh Tamim Bin Hamad Al-Thani வருகை தந்துள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த கத்தார் இளவரசரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, அங்கு அரங்கேறிய கிராமப்புற நடனத்தை இருவரும் சேர்ந்து கண்டுகளித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து, கத்தார் இளவரசரை சந்தித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இன்றைய தினம், குடியரசுத் தலைவர் மாளிகையில், கத்தார் மன்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தனித்தனியே சந்தித்து, கத்தார இளவரசர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்புவதற்கு அங்கிருந்து அதிக கச்சா எண்ணெயை வாங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கத்தார் நாட்டு இளவரசர் இந்தியா வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.