ஆம் ஆத்மி முகநூல்
இந்தியா

இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில், புதுடெல்லி தொகுதியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலும், கல்கஜி தொகுதியில் இருந்து முதலமைச்சர் அதிஷியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில், புதுடெல்லி தொகுதியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலும், கல்கஜி தொகுதியில் இருந்து முதலமைச்சர் அதிஷியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர்பூர் தொகுதியில் அமைச்சர் கோபால் ராயும், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் அமைச்சர் சவுரப் பரத்வாஜும், ஷாகுர் பஸ்தி தொகுதியில் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவும் விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மாவை, கெஜ்ரிவாலுக்கு எதிராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.