Headlines
Headlinesfacebook

Headlines|ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட மோகன்பாபு!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா முதல் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட மோகன்பாபு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்றைக்கு பதில் நாளை அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல். நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பவும் திட்டம்.

  • மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக. அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

  • சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு .200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் பகல் கனவு நிறைவேறாது என்றும் விமர்சனம்.

  • அதிமுகவின் கட்டுக்கதைகளை மக்கள் நம்பப்போவதில்லை என்றும், இட்டுக்கட்டிய பொய்களையே இபிஎஸ் எழுதி நிரப்பியிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்.

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு.ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என்றும் விளக்கம்.

  • ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்து, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிரானதாகவே இருந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.

  • திமுக கூட்டணியில் இருந்து விசிகவை பிரிப்பதே ஆதவ் அர்ஜுனாவின் செயல்திட்டமாக இருந்தது என புதிய தலைமுறையின் சிறப்பு நேர்காணலில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு.

  • ஓட்டுக்கு காசு கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

  • திமுக ஆட்சியில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி.

  • நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு. தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தகவல்.

  • புதுச்சேரியில் அரசு சொத்தை விலை பேசியதாக வெளியான தகவல்களுக்கு திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு. தன்னைப் பற்றி வெளியான மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ் நகைச்சுவையாக இருந்ததாகவும் கருத்து.

  • மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் மோகன்பாபு. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை தாக்கியது துரதிருஷ்டவசமானது என்றும் பேச்சு.

  • வீணாக்கப்பட்ட நீரில் போலியோ வைரஸ் இருப்பது ஆய்வில் கண்டுபிடிப்பு. போலியோ தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்களுக்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்றும் தகவல்.

  • சையது முஷ்தாக் அலி கிரிக்கெட் தொடரை 2வது முறையாக வென்றது மும்பை அணி. இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது.

  • மகளிர் ஜுனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி. சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com