அஸாம் வெள்ள பாதிப்பில் 82 பேர் பலி web
இந்தியா

அஸாம்| வெள்ள பாதிப்பில் 82 பேர் பலி.. 2 லட்சம் பேர் பாதிப்பு!

அஸாம் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்..

Rishan Vengai

அஸாம் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் தவணை செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அஸாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளால் இறந்தோர் எண்ணிக்கை 82ஐ தொட்டுள்ளது. மழை நீடிக்கும் நிலையில் சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

assam floods 2026

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் கடன் தவணையை திரும்பச்செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, அஸாம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக 11 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.