\
pm opens new andhra airport
pm opens new andhra airportx/pmo

ஆந்திராவில் ரூ.5000 கோடியில் புதிய விமான நிலையம்.. திறந்துவைத்த பிரதமர் மோடி!

ஆந்திராவில் விஜயநகரம் அருகே போகாபுரத்தில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்..
Published on
Summary

ஆந்திர மாநிலம் போகாபுரத்தில் 2,200 ஏக்கரில் ரூ.5,000 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய அதிநவீன சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விஜயநகரம் அருகே உள்ள இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. வரும் 17ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் போகாபுரத்தில் புதிய அதிநவீன சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். விஜயநகரம் அருகே உள்ள இவ்விமான நிலையம் 2 ஆயிரத்து 200 ஏக்கரில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் திறன்கொண்ட இவ்விமான நிலையம் வரும் 17ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

pm opens new andhra airport
pm opens new andhra airportx

சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு பெயர் இவ்விமான நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக பழங்குடி மக்களின் நடன நிகழ்ச்சியை பிரதமர் பார்வையிட்டார்.

pm opens new andhra airport
மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.. கேட்கப்படும் 33 கேள்விகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com