டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 46 சதவீதம் பேர், பள்ளி படிப்பை தாண்டாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 699 பேரில் 324 பேர் பள்ளி படிப்பை தாண்டாதவர்கள் என்பதும், 5 முதல் 12 ஆம் வகுப்புவரை மட்டுமே அவர்கள் படித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதேபோல், 322 வேட்பாளர்கள் உயர்கல்வி பயின்றுள்ள நிலையில், 29 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.