செய்தியாளர்: சுமன்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கரிம்மா பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 8 ம் வகுப்பு மாணவிகள் தேர்வு முடித்து விட்டு மாலை வீட்டுக்குச் செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சிமெண்ட் லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மாணவிகள் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.