செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட்டா அருகே கோட்டிபுரா என்ற இடத்தில் திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசு பேருந்து முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.