ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையைவிட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் சென்ற வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக, இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.