ராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு: சக வீரர்கள் 4 பேர் பலி
சட்டீஸ்கர் மாநிலத்தில் சக வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த வீரர் அங்கிருந்து தப்பித்து தலைநகர் ராய்ப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தின் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிமுகள்ள பஸ்குடா பகுதியில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் முகாமிட்டிருந்தனர். காடுகள் நிறைந்த பகுதியில் இந்த முகாம் இருந்தது. முகாமில் இருந்த வீரர் சந்த் ராம் என்ற வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விகே சர்மா மற்றும் மெக் சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்பிர் மற்றும் கான்ஸ்டபிள் ராவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.