3 Aam Aadmi join BJP x
இந்தியா

2 நாட்களில் 3 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா.. ஆம் ஆத்மியிலிருந்து பாஜகவுக்கு தாவல்!

2 நாட்களில் 3 எம்.எல்.ஏக்கள ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

PT WEB

பஞ்சாபில் ராஜிநாமா செய்த 3 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். சனார் தொகுதி எம்.எல்.ஏ ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, சமனா தொகுதி எம்.எல்.ஏ சேத்தன் சிங் ஜூராமஜ்ரா, வடக்கு அமிர்தசரஸ் தொகுதி எம்.எல்.ஏ விஜய் பிரதாப் சிங் ஆகிய மூவருக்கும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் காரணமாக அடுத்தடுத்து பதவியிலிருந்து விலகினர்.