பீகார் மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள வாட்கி கிராமத்தின் அருகே புதன்கிழமை அன்று இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
சபில்பூர் காவல் நிலையப்பகுதியில் உள்ள பிரகதி பெட்ரோல் பம்ப் அருகே தவறான பாதையில் வேகமாக வந்ததுள்ள டிரக் ஒன்று, பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ராஜ்கிரில் இருந்து பர்னவுசாவுக்குச் சென்று கொண்டிருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்கள் காஞ்சன் தேவி, திலீப் குமார்,பிந்தி பிரசாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பிரியங்கா தேவி, ரிங்கி தேவி, ரவி ரஞ்சன் குமார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ராஜ்கிர் துணைப்பிரிவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், பாவாபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இவர்களின் உடல் நிலை சீராக இருக்கிறது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
"சபில்பூர் காவல்நிலையத்தில் தவறான டிரக் டிரைவர் மீது அவசர மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மோதியதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று சபிலாபூர் காவல் நிலையத்தின் SHO சஞ்சய் குமார் கூறினார்.