இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

Headlines|மகளிர் உரிமைத் தொகை முதல் திருப்பதியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மகளிர் உரிமைத் தொகை முதல் திருப்பதியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு. பரமபதவாசல் திறப்புக்காக இலவச தரிசன டோக்கன் பெற முயன்றபோது நிகழ்ந்த சோகம்.

  • திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் உயிரிழப்பு. காயமடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு தொடரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பக்தர்களிடம் மன்னிப்பு கோரியது தேவஸ்தானம் நிர்வாகம். உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி.

  • திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

  • இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம். சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி.மேலும், யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம் என அதிமுகவுக்கு பதில்.

  • தமிழக மக்களையும் சட்டமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக ஆளுநருக்கு பேரவையில் கண்டனம். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமையில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்.

  • பொங்கலை முன்னிட்டு வரும் 10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு. வழக்கமாக 15ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டம்.

  • ஆந்திராவில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. நவீன ஆந்திரப்பிரதேசத்தை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளதாக பேச்சு.

  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு டெல்லியில் ஆலோசனை.முதல் கூட்டத்திலேயே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு.

  • ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல். இன்று திட்டமிடப்பட்டிருந்த டாக்கிங் சோதனையை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைத்தது இஸ்ரோ.

  • ராணிப்பேட்டையில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில், நிகழ்விடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சோகம்.

  • நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.

  • சமூக நீதிக்கும், பெரியாருக்கும் என்ன தொடர்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. சமூக நீதியை போராடி பெற்றுத் தந்தவர் பெரியாரா? ஆனைமுத்துவா? என்றும் பரபரப்பு பேட்டி.

  • விக்கிரவாண்டி தனியார் பள்ளியில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், கைதான பள்ளி தாளாளர் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.

  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ. வனப்பகுதியை அழித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களையும் சேதப்படுத்தியதால் கடும் பாதிப்பு.

  • விபத்தை சந்தித்தபோதும் துவண்டு விடாத அஜித் குமார். துபாயில் மீண்டும் கார் ரேஸ் பயிற்சியை தொடங்கியதால் ரசிகர்கள் உற்சாகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com