சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடக கலால் துறையில் ரூ.2,500 கோடி ஊழல்? அமைச்சர் ராஜினாமா செய்ய பாஜக வலியுறுத்தல்!

கர்நாடக மாநில கலால் துறையில் சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு மிகப்பெரிய லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

PT WEB

கர்நாடக மாநில கலால் துறையில் சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு மிகப்பெரிய லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடக மாநில கலால் துறையில் சுமார் ரூ.2,500 கோடி அளவிற்கு மிகப்பெரிய லஞ்ச ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கலால் துறை அமைச்சர் ஆர்.பி. திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக கலால் துறையில் அதிகாரிகளின் இடமாற்றம், மதுக்கடை உரிமங்கள் வழங்குதல் மற்றும் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. குறிப்பாக, மது வியாபாரிகள் சங்கத்தின் புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்கவும் அல்லது புதிய உரிமம் பெறவும் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாகப் பெறப்படுவதாகவும், இது ஒட்டுமொத்தமாக ரூ.2,500 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா

"இந்த ஊழலில் அமைச்சரின் அலுவலகத்திற்கு நேரடித்தொடர்பு உள்ளது. எனவே, முதல்வர் சித்தராமையா உடனடியாக அமைச்சர் திம்மாப்பூரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும்" என்று ஆர்.அசோக் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் மதுக்கடை உரிமம் தொடர்பான லஞ்சம் வாங்கிய வழக்கில் கர்நாடக கலால் துறை அதிகாரிகள் இருவரை லோகாயுக்தா காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்திருந்தனர். இது பாஜகவின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் ஆளும் காங்கிரஸ் அரசு மறுத்துள்ளது. எனினும்,லோகாயுக்தா விசாரணையில் உண்மை வெளிவரும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் கூட்டத்தொடரில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.