வெப்ப அலை Pti
இந்தியா

”ஜூன் மாதத்தில் தீவிரமாகும் வெப்ப அலை” - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

2026ஆம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, இந்தியா முழுவதும் சராசரிக்கும் குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

PT WEB

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், நாடு முழுவதும் நீண்ட கால சராசரியைவிட 90 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு இயல்பாக இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்பம், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளில் இயல்பைவிடக் குறைவாகவே மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை

பருவமழை குறைவதோடு, ஜூன் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும். குறிப்பாக, உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக நாட்கள் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைவான மழைப்பொழிவு மற்றும் கடும் வெப்பம் காரணமாக விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் மின்சாரத் தேவைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் உச்சகட்ட வெயில் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.