ஜம்மு - காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 7 முதல் ஜனவரி 18 வரை பலர் பேர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்தவகையில், ஜம்முவில் உள்ள எஸ்எம்ஜிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது அஸ்லாமின் என்பவரின் கடைசி குழந்தையான யாஸ்மீன் கவுசர் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி மர்மகாய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல், வலி, குமட்டல், சுயநினைவு இழத்தல் போன்றவை ஏற்பட்டு சில நாட்களில் அவர்கள் உயிரிழந்து விடுவதாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் 7 - 12 க்கு இடைப்பட்ட காலத்தில், யாஸ்மீனின் உடன்பிறப்புகள், தாத்த, பாட்டி என இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மர்ம காய்ச்சல் குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவிக்கையில், “ஜே & கே சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்தன. ஆனால் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உள்துறை அமைச்சர் உயர்மட்ட நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார். இதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தவுடன் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.இந்த மர்ம காய்ச்சல் என்னவென்று தெரியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.